Posts

Showing posts from August, 2018

நல்வாழ்த்துக்களும் வீரவணக்கங்களும் !

Image
                            சுழலும் பூமியில் முன்னொரு நாள் சுதந்திரக்காற்று  நம் மண்ணில்  பட்டுப் படர்ந்ததால்  பட்டொளி வீசி பறந்தது நம் பாரதக்கொடி ! மாறுதல்களை எதிர்பார்த்தோம் மாற்றங்களும் நிகழ்ந்தன மனிதம்தான் செழிக்கவில்லை தன்னை மட்டுமே செதுக்கிக்கொள்ளும் சிலைகளானோம்  உடைந்து நொறுங்கிய பலரை ஒன்றிணைக்கவும் மறந்துபோனோம் !  விடுதலை பெற்ற தேசம்தான் ஒரு மரங்களின்  மதிப்பைக்கூட இன்னும் உணரவில்லையேயென்ற ஆதங்கம் உள்ளேயிருந்து எனக்குள் வருத்தினாலும், மனிதம் மேன்மையுற  எப்போதாவது எதையேனும்  நம் தேசம் செய்திருக்கிறது என்ற நினைவுகளும் ‘செய்வோம்’ என்ற  நம்பிக்கையும்தான் இன்முகத்தோடு இந்நாளில் காலந்தோறும் நம்மில் பலரை கைகுலுக்கச் செய்கிறது... விடுதலைக்குக் காரணமான  வீரத்தியாகிகளே !  இதே நம்பிக்கையுடன் எம் மண்ணில்  இன்று மலர்ந்த கோடானகோடி பூக்கள் உங்கள்மீது தூவப்படுகிறது நிமிர்ந்த நெஞ்சுடன்  உங்களுக்கு என் வீர வணக்கங்களும்,...