கல்லூரியை விட்டு விடை பெறுகிறார்கள்... கல்வியை விட்டல்ல!
*என் மனதிற்கினிய மாணவ மாணவிகளுக்கு* (2022-25 Batch) எங்கள் வாசல் தேடி வந்த வசந்தகால பறவைகள் நீங்கள்! இன்று உங்கள் வாழ்வின் ஓர் இனிய சகாப்தம் முடிவடைகிறது! இன்று புன்னகைக்கும் நீங்கள் இங்கிருந்து புறப்படவும் தயாராகுங்கள்! நாளை புதியதோர் உலகம் உங்களுக்காக உதயமாகிறது! இன்னும் சில நாட்களுக்குள் சில மாதங்களுக்குள் சில வருடங்களுக்குள் உங்களில் பலர் ஒருவருக்கொருவர் உறவாடிக் கொள்வதை மறந்திருப்பீர்கள்! மெல்ல மெல்ல சிலரின் பெயர்களையும் முகங்களையும் நினைவுபடுத்த வேண்டிய நிர்பந்தம் உங்களுக்குள் உருவாகியிருக்கும்! சுகதுக்கங்களில் நட்புக்காக வந்து நிற்கும் அந்த நால்வர் மட்டுமே அவ்வப்போது இந்த கல்லூரிகால நினைவுகளை சுமந்து நிற்கும் சுமைதாங்கியாக சுழன்று வருவீர்கள்! நெருங்கிப்பழகிய நட்பின் அழைப்புகளை ஏற்கக்கூட நேரமில்லாமல் காலப்போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேடலை நோக்கி விரைந்து ஓடிக் கொண்டிருப்பீர்! அன்று அங்கு அவனைப் பார்த்தேன் இன்று இங்கு இவனைப் பார்த்தேன் என்று போகிற போக்கில் நலம் விசாரித்துவிட்டு மூன்றாவது மனிதரைப் போல் உங்கள் பக்கத்தில் உட்கார...