Posts

Showing posts from June, 2020

உலகசினிமா மாமேதை அகிரா குரோசாவாவின் செவன் சாமுராய் - 1954.

Image
புகழ்பெற்ற உலகத்திரைப்படங்களில் சமீபத்தில் கண்டு வியந்தது ஜப்பானிய திரைப்பட மாமேதை அகிரா குரோசாவா இயக்கிய செவன் சாமுராய். 1954 இல் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னிலை குறையாமல் தனித்துதான் நிற்கிறது. இன்று இருப்பது போன்ற எவ்வித நவீனக் கருவிகளும் திரைத்துறையில் வந்திராத அக்காலகட்டத்தில் அவரது முயற்சிகள் அளப்பரியது ஆகச்சிறந்தது. தொழில்நுட்பம் பின்தங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் இத்தனை திறமையாக செவன் சாமுராய் திரைப்படத்தை இவரால் எப்படி இயக்க முடிந்தது என்று வியந்துபோனேன்.      செவன் சாமுராய் படத்தின் திரைக்கதை ஐப்பானிய கிராமமொன்றில் 16 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மலையடிவாரத்தில் இருக்கிற சிறு கிராமத்தின் விவசாய உற்பத்தித் தானியங்களையும் பல்வேறு வளங்களையும் பல முரட்டுத்திருடர்கள் கொள்ளையடிக்க வருவதை அறிந்த அக்கிராமத்தவர்கள் தங்கள் நிலங்களையும் வளங்களையும் எப்படியாவது தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதற்காக நகரவெளியில் இருந்து கூலிக்கமர்த்தப்பட்ட ஏழு தலைசிறந்...