நல்வாழ்த்துக்களும் வீரவணக்கங்களும் !

சுழலும் பூமியில்
முன்னொரு நாள்
சுதந்திரக்காற்று
நம் மண்ணில்
பட்டுப் படர்ந்ததால்
பட்டொளி வீசி பறந்தது
நம் பாரதக்கொடி !
மாறுதல்களை எதிர்பார்த்தோம்
மாற்றங்களும் நிகழ்ந்தன
மனிதம்தான் செழிக்கவில்லை
தன்னை மட்டுமே
செதுக்கிக்கொள்ளும்
சிலைகளானோம்
உடைந்து நொறுங்கிய
பலரை ஒன்றிணைக்கவும்
மறந்துபோனோம் !
விடுதலை பெற்ற தேசம்தான்
ஒரு மரங்களின்
மதிப்பைக்கூட இன்னும்
உணரவில்லையேயென்ற
ஆதங்கம் உள்ளேயிருந்து
எனக்குள் வருத்தினாலும்,
மனிதம் மேன்மையுற
எப்போதாவது எதையேனும்
நம் தேசம் செய்திருக்கிறது
என்ற நினைவுகளும்
‘செய்வோம்’ என்ற
நம்பிக்கையும்தான்
இன்முகத்தோடு இந்நாளில்
காலந்தோறும் நம்மில் பலரை
கைகுலுக்கச் செய்கிறது...
விடுதலைக்குக் காரணமான
வீரத்தியாகிகளே !
இதே நம்பிக்கையுடன்
எம் மண்ணில்
இன்று மலர்ந்த கோடானகோடி பூக்கள்
உங்கள்மீது தூவப்படுகிறது
நிமிர்ந்த நெஞ்சுடன்
உங்களுக்கு என் வீர வணக்கங்களும்,
எம்மோடு விடுதலையை
அனுபவிப்பவர்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துக்களும்....
வாழ்த்துவதால் முயற்சி சிறக்கும்
வாழ்த்துவதால் சூழல் இன்புறும்
வாழ்த்திடவே கல்விகள் யாவும்
கற்றிடல் வேண்டும்...
சுதந்திர தின வாழ்த்துக்கள் தோழமைகளே !
மு.செல்லமுத்து - முத்துவயல் (15.08.2018)
.......................................................................................
Comments
Post a Comment