Posts

Showing posts from 2017

சண்டிவீரன் திரைப்படம் - ஒரு பார்வை…

Image
   எந்தவொரு சமுதாய நிகழ்வுகளையும் காலத்திற்கேற்ற இரசனையோடு வாழும் மனிதர்களுக்கும் வருங்கால மனிதர்களுக்கும் எடுத்துச்சொல்லும் சேவையில் பெரும்பங்கு வகிப்பது ஊடகம் என்று சொல்லலாம். அந்த வகையில், A.சற்குணம் இயக்கத்தில், அதர்வா ஆர்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சண்டிவீரன் திரைப்படத்தின் திரைக்கண்னோட்டத்தினை இன்று பார்க்கலாம். போதுமான வாழ்வியல் தேவைகள், தான் பிறந்த மண்ணில் கிடைக்காத பொழுது அல்லது ஜனநாயகம் தர மறுக்கின்ற பொழுது அங்கிருந்து  இடம்பெயரும் சூழ்நிலை பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் இன்றும் நிலவுகிறது. எந்தவொரு உயிரினங்களின் அடிப்படைத்தேவையும் அத்தியாவசியத் தேவையும் முதலில் தண்ணீர் தான், இயற்கை தந்த மிகப்பெரிய கொடையும் அதுதான். சண்டிவீரன் திரைப்படமும் தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் நிகழும் இந்தப் பிரச்சனையைத் தான் அதர்வா ஆர்த்தியின் காதலோடும், இரண்டு கிராமத்தின் கலவரத்தோடும் சில பல நகைச்சுவையோடு சித்தரிக்கின்றது.  எந்தவொரு சமுதாய மாற்றத்திற்குப் பின்னணியிலும் கட்டாயம் ஒரு உண்மையான போராளியின் உயிர்த்தியாகம் குருதிவடித்து உணர்த்...

தனிஒருவன் - திரைவிமர்சனம்…

Image
         இந்த நூற்றாண்டின் நகரமயமாக்கல் சூழலில் நவீன ஆயுதங்களோடும் மாறுபட்ட அறிவியல் சிந்தனைகளோடும் கண்ணுக்குப் புலனாகாமல் புத்திக்கூர்மையால் ஒவ்வொரு நிமிடமும் பெருங்குற்றங்களுக்கு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகத்தையே புரட்டிப்போடும் விஞ்ஞானத் தேடலில் மிகமுக்கியமான ஒன்று அறிவுத்திருட்டு. கண்முன்னே நிகழும் சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்க தைரியம் இல்லாத இன்றைய மனிதர்களுக்கிடையில், கண்ணுக்கு மறைவாக நிகழும் அறிஞர்களின் அறிவியல் ஊழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட துடிக்கும் தனிஒருவன் பயனத்தின் பின்னனியை கல்பாத்தி ள.அசோகரம் தயாரிப்பில் இயக்குநர் ராஜாவின் படைப்பில் ஜெயம்ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தனிஒருவன் திரைப்படத்தின் வெற்றியை இன்று விமர்சனத்தில் கொண்டாடலாம். ஜெயம்ரவியின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் சமுதாய அவலங்களை நேரிடையாக தோலுரிக்கும் போராட்டம் வாய்ந்ததாகவே அமைகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதற்குக் காரணம் அவருடைய பண்பும் பயனள்ள படங்களை தேர்ந்நெடுத்து நடிக்கும் பக்குவமும் திறமையும் என்று சொல்லலாம்...

தா.பாண்டியன் - திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் நூல் விமர்சனம்

தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காக ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கங்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட   அரசியல் வித்தகர் தா.பாண்டியன் அவர்கள் இயற்றிய ‘ திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் ’ என்னும் நூல் பற்றிய விமர்சனத்தை இன்று உங்கள் முன் வைக்கிறேன். வள்ளுவரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து , நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி , சான்றோர்களின் துணையையும் நாடி , அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும் , அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். அந்தவகையில் , தெளிந்த அறிவுடன் தா.பாண்டியன் அவர்களின் முயற்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நீயூ செஞ்சுரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ‘ திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் ’ என்னும் நூலானது , உண்மையான ஆராய்ச்சி நூலாக எக்காலத்திற்கும் பயனள்ள உயர்ந்த ஆராய்ச்சி நூலாக இலக்கிய வாசிப்பில் ஈடுபாடுடையவர்கள் போற்றத்தகும் என்னும் கருத்தினை இந்நூல் விமர்சனத்தின் வாயிலாக உங்கள் முன் உணர்த்த விரும்பு...

ஆ.பூமிச்செல்வத்தின் - 'மதுரைச் சிறுகதைகள்' தேர்வும் தொகுப்பும் நூல் விமர்சனம்

Image
      நம்மில் பலரும் அவரவர் வாழ்க்கையைப் பற்றிய பலவிதமான மதிப்பீடுகளின் வாயிலாகத்தான் , கதைகளோடே பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றில்தான் படைப்பாளியும் படிப்பாளியும் அடங்குவர். கடந்து போன தலைமுறைகளின் வாழ்வு பற்றியும் , வாழ்கின்ற சமூகம் பற்றியும் விமர்சனத்தில் அறிய முற்படாதவர் அல்லது அவற்றில் அக்கறை இல்லாதவருக்குத்தான் கதை வெறும் பொழுதுபோக்கு. தம் வாழ்வியல் நிகழ்வுகளை அல்லது அனுபவங்களை உணர்வுப் பூர்வமாக கதைகள் மூலம் உள்வாங்கிக் கொள்பவருக்கு அவை தம் வாழ்வாகவே உருமாறுகிறது. தொல்பழமையும் வரலாற்று முக்கியத்துவமும் , பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழினம் கைக்கொள்ளும் பழக்கவழக்களும் , கட்டமைத்த பண்பாட்டு விழுமியங்களும் , படைத்தளித்துள்ள கலை - இலக்கிய வகைமைகளும் சமகாலச்சமூகத்தில் , பற்பல அந்நியக் கலப்புகளோடு சவால்களைத் தாண்டி சரித்திரத்தில் பேசப்பட்டு வருகின்றன என்றால் படைப்புகளும் அதனை ஆக்கவதற்காக தனது வாழ்க்கை நிமிடங்களை செலவு செய்த படைப்பாளிகளின் உன்னதமான செயல்களுக்கு மக்களினம் மனமுவந்து பாராட்ட வேண்டும். அந்த வகையில் , மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறையில் பணி...

பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணம் (நவீனப் பெண் தன்வரலாற்றுப் புனைவுகளினூடான வாசிப்பு)

Image
       நிலவென்றும் , மலரென்றும் வர்ணிக்கப்படும் பெண்களின் குணம் மென்மை என காலம்காலமாகக் கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில் , நெருப்பை உமிழும் சூரியனாக வாழ்க்கை களவாடப்படும்போது எல்லாப் பெண்களுமே நிலவாக இருப்பதில்லை. சிலர் நெருப்பை உமிழும் சூரியனாகவே மாறுகிறார்கள். அவ்வாறு பெண்களின் மறைக்கப்பட்ட கொடும் வாழ்க்கையைப் பதிவு செய்யும் உலகளவிலான படைப்புகள் பல தமிழிலும் , தமிழ் மொழிபெயர்ப்புகளிலும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆண் பெண் என்ற இருநிலையில் பொதுவாக வரலாறு என்பது வெற்றிகளின் தொகுப்பாகவும் ஆண்களின் வீரதீர சாகசங்களைப் பேசும் ஒரு ஆவணமாகவே நெடுங்காலமாகவே நம்கண்முன் எல்லாநிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் , பெண்களின் பார்வையில் இவர்களுக்கான அனுபவ வரலாறுகள் எழுதப்படுவது மிக மிகக் குறைவுதான். இவர்களின் மனதிற்குள் தன் வாழ்வனைத்தையும் போட்டு மக்கவைத்து செத்துப் போவதே மேன்மை என்றுதான் இன்றுவரை வீடுகள்தோறும் போதிக்கப்பட்டு வருகிறது. எனவேதான் , பெண் சுயசரிதைப் படைப்புகளின் அகப்புற பரிமாணங்களை இன்றைய சூழலில் பல்வேறு கோணங்களில் ஆராயவேண்டியுள்ளது. அந்தவரிச...