தனிஒருவன் - திரைவிமர்சனம்…
இந்த நூற்றாண்டின் நகரமயமாக்கல் சூழலில் நவீன ஆயுதங்களோடும் மாறுபட்ட அறிவியல் சிந்தனைகளோடும் கண்ணுக்குப் புலனாகாமல் புத்திக்கூர்மையால் ஒவ்வொரு நிமிடமும் பெருங்குற்றங்களுக்கு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகத்தையே புரட்டிப்போடும் விஞ்ஞானத் தேடலில் மிகமுக்கியமான ஒன்று அறிவுத்திருட்டு. கண்முன்னே நிகழும் சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்க தைரியம் இல்லாத இன்றைய மனிதர்களுக்கிடையில், கண்ணுக்கு மறைவாக நிகழும் அறிஞர்களின் அறிவியல் ஊழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட துடிக்கும் தனிஒருவன் பயனத்தின் பின்னனியை கல்பாத்தி ள.அசோகரம் தயாரிப்பில் இயக்குநர் ராஜாவின் படைப்பில் ஜெயம்ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தனிஒருவன் திரைப்படத்தின் வெற்றியை இன்று விமர்சனத்தில் கொண்டாடலாம்.
ஜெயம்ரவியின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் சமுதாய அவலங்களை நேரிடையாக தோலுரிக்கும் போராட்டம் வாய்ந்ததாகவே அமைகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதற்குக் காரணம் அவருடைய பண்பும் பயனள்ள படங்களை தேர்ந்நெடுத்து நடிக்கும் பக்குவமும் திறமையும் என்று சொல்லலாம். அவருடைய சமீபகால வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்கது, பேராண்மை நிமிர்ந்துநில், ரோமியோ ஜீலியட், சகலவல்லவன் போன்ற வரிசையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக தனிஒருவன் அமைந்துள்ளது.
உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று நான் சொல்கிறேன் என்பது ஒருவனின் கேரக்டரைத் தெரிந்து கொள்ள அறிஞன் ஒருவன் சொன்ன பொன்மொழி. ஆனால், உன் எதிரி யாரென்று சொல் நீ யாரென்று நான் சொல்கிறேன் என்பது ஒருவனின் கெப்பாசிட்டியைத் தெரிந்து கொள்ள தனிஒருவன் சொன்ன புதுமொழி. ஆக நண்பர்களை விட எதிரிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் நேசித்தால் தான் இலட்சியப்பாதையின் வெற்றியை சுவாசிக்க முடியும் என்பதை தனிஒருவன் திரைக்கதையின் கருத்தாக மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை பொறுத்தவரை இலட்சியம் என்பது நடிகனாக வரும் ஜெயம்ரவிக்கும் எதிரியாக வரும் அரவிந்த்சாமிக்கும் வௌ;வேறு தான். இந்திய குடிமைப்பணியில் பயிற்சி முடித்து ஐPளு அதிகாரியாக வரும் கதாநாயகன் மித்ரன் என்ற ஜெயம்ரவிக்கும், விஞ்ஞானத்தேடலின் வெற்றியின் மகனாக வலம் வரும் சித்தார்த் என்ற அரவிந்த்சாமிக்கும் இடைப்பட்ட ஒரு சவாலன போராட்டம் திரையில் எப்படி பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது தான் தனிஒருவன் திரைக்கதையின் வெளிப்பாடு.
உலகில் நம்மை எவர் வேண்டுமானாலும் எதிரியாக பாவிக்கலாம். ஆனால், நம்முடைய எதிரி யாரென்று தீர்மானிப்பது நாம் தான். அந்த வகையில் அரசு அலுவலகங்களில் அதிகாரியாக பணிபுரியும் பெரும்பாலானோர் தன் பணியினை செய்யத்தவறும் இன்றைய சூழலில், வேலைக்குச் செல்லுமுன்னே தான் செய்ய வேண்டிய பணி என்னவென்று சமூகத்துரோகிகளின் பெருங்குற்றங்களைக் ஆதாரங்களோடு பட்டியலிட்டு தன் எதிரி யாரென்று தீர்மானிக்கும் மித்ரன் என்ற ஜெயம்ரவி கதாபாத்திரம் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.
சித்தார்த் என்ற அரவிந்த்சாமியும், அவருடைய தந்தையாக வரும் செங்கல்வராயன் என்ற தம்பிராமையாவும், அரசியல் பிரமுகராக வெளிப்படும் நாசரும் தனிஒருவன் திரைக்கதையை அடுத்தடுத்து நகர்த்திச்செல்ல திறமையாக தங்கள் நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். செய்தித்தாள்களில் வெளிப்படும் கொலை கொல்லை கற்பழிப்பு வழிப்பறி கடையடைப்பு போன்ற எதையும் சாதாரணம் என்று நினைத்துவிடக்கூடாது, அவற்றின் பின்னனியில் பெரும்புள்ளிகளின் அரசியல் உளவியல் சதித்திட்டம் மறைந்துகிடக்கிறது என்பதை புரியவைத்து, எந்தச் சிறிய பிரச்சனைக்கும் பின்னனியில் பிணாமியின் துணையோடு சமூகத்துரோகிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பர் அதனைக் கண்டறியும் தந்திரத்தை வெளிப்படுத்திய ஜெயம்ரவியின் நடிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது.
எதிரியின் இலட்சியத்தை முறியடிப்பதற்காக தன் உயிரை விடுவதல்ல வெற்றி, வாழ்ந்து கொண்டே அவனை வீழ்த்துவது தான் வெற்றி எனப்புரிய வைத்த தனிஒருவன் கதாநாயகி நயன்தாரவும் IPS ஆக இருந்தாலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வரும் போது அதனை மறுத்து இலட்சியத்திற்கு முதன்மையிடம் கொடுத்திருக்கும் இயக்குநரின் பார்வை அழகானது. மேலும், சித்தார்த்தின் அறிவியல் ஊழல் மற்றும் வியாபாரச்சந்தையின் மோசடிகளை முறியடித்து எதிரிக்கும் மரணத்தறுவாயில் வாழ்வளித்தால் அவனோடு தொடர்புள்ள பெரும்புள்ளிகளை அவனால் வீழ்த்தலாம் என நினைக்கும் தனிஒருவன் பயணம் தொடர்ந்தாலும் அவனால் பாதிக்கப்பட்ட பலரும் அவனை வீழ்த்தி விஞ்ஞான ஊழலுக்கு முடிவு கட்டுகின்றனர்.
தனிஒருவனுக்கு சமூகத்தின் மீதான அன்பும் அக்கரையும் பதவியும் இருந்து திறமையை வெளிப்படுத்தும் சூழ்நிலை மட்டும் மிகச்சரியாக அமைந்தால் இலட்சியப்பாதையில் வெற்றிக்கொடியை நாட்டுவது நிச்சயம் என்ற வெற்றிப்படத்தின் விமர்சனத்தினோடு இக்கருத்தையும் முன்வைக்கலாம்.
- இப்பதிவு செப்டம்பர் 2016 அன்று புதுச்சேரி வானொலியில் விமர்சிக்கப்பட்டது.
- இப்பதிவு செப்டம்பர் 2016 அன்று புதுச்சேரி வானொலியில் விமர்சிக்கப்பட்டது.
மு.செல்லமுத்து
தமிழியல்துறை, தமிழியற்புலம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பல்கலைநகர் - மதுரை – 21.

Comments
Post a Comment